2024ஆம் ஆண்டில் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் சர்வதேச ஒத்துழைப்பைச் சீனா தொடர்ந்து விரிவாக்கியுள்ளது.
சீனா மற்றும் வெளிநாட்டு அரசாங்களுக்கிடையில் 118 அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவில் சேர்ந்த நாடுகளுடனான கூட்டு ஆய்வகங்களின் எண்ணிக்கை 70க்கும் அதிகமாகும் என்று 14ஆம் நாள் நடைபெற்ற சீனத் தேசிய அறிவியல் தொழில்நுட்ப பணிக்கூட்டத்தில் தெரிய வந்துள்ளது.
தற்போது, சீனாவின் அறிவியல் தொழில்நுட்ப வல்லரசின் கட்டுமானம் வலுவாகக் காலடியெடுத்து வைத்துள்ளது. முழு சமூகத்தின் ஆய்வுக்கான நிதி ஒதுக்கீடு அளவு உலகின் 2ஆவது இடத்தில் வகித்துள்ளது. உலகளவில் புத்தாக்க குறியீட்டுப் பட்டியலில் சீனா 11ஆவது இடத்தில் உள்ளது.
2025ஆம் ஆண்டு, அமைப்பு முறை ரீதியில் அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கத திறனை முக்கியமாக உயர்த்தும் வகையில், அறிவியல் தொழில்நுட்ப அமைப்பு முறையின் புதிய சுற்று சீர்திருத்தத்தைச் சீனா பன்முகங்கிலும் துவங்கவுள்ளது என்றும் குறிப்பிடப்ப்பட்டுள்ளது.
