அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்திச் செயலாளர் பியர் 15ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, பயங்கரவாதத்துக்கு ஆதரவான நாடுகள் பட்டியலிலிருந்து கியூபாவை நீக்க அமெரிக்க அரசுத் தலைவர் பைடன் முடிவு செய்துள்ளார்.
கியூப வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பைடன் அரசின் இச்செயல், குறிப்பிட்டளவில் பயனாக இருக்கும் ஒரு தீர்மானம் என்றும், இதற்கான திசை சரியாக இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
கியூபா மீது அமெரிக்காவின் பொருளாதார தடையை எதிர்த்து, பொய்யான பிரசார நடவடிக்கைகளை கியூபா தொடர்ந்து வெளிப்படுத்தும். அதே வேளையில், பேச்சுவார்த்தை, ஒன்று மற்றதன் உள் விவகாரங்களில் தலையிடாமல் இருக்கும் அடிப்படையில், அமெரிக்காவுடன் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து உறவை வளர்க்க கியூபா விரும்புகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.