கரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தப் பின், இவ்வாண்டின் முதல் இரண்டு மாதங்களில், சீனப் பொருளாதாரத்தை நிதானப்படுத்தும் கொள்கைகள் நடைமுறைக்குயில் பயன் அளித்து வருகின்றன. பல பொருளாதாரக் குறியீடுகளும், பொருளாதாரச் செயல்பாட்டின் ஒட்டுமொத்த நிலைமையும் சீராக காணப்படுகின்றன என்று தேசிய புள்ளியியல் பணியகம் மார்ச் 15ஆம் நாள் வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.
இவ்விரு மாதங்களில், தொழில் துறை உற்பத்தி மீட்சி அடையும் வேகம் விரைவடைந்து, தொழில் நிறுவனங்களின் நம்பிக்கை அதிகரித்து வருகின்றது. ஆண்டுக்கு 2கோடி யுவானுக்கு மேலான வருமானமுடைய தொழிற்நிறுவனங்களின் கூடுதல் மதிப்பு, கடந்த ஆண்டை விட 2.4விழுக்காடு அதிகமாகும். மேலும், நாடு முழுவதும் சேவைத் துறை தெளிவாக வளர்ச்சி அடைந்தது. சந்தை விற்பனை வீழ்ச்சியிலிருந்து உயரத் தொடங்கியது. சரக்குகளின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஓரளவு குறைந்த போதிலும், வர்த்தக கட்டமைப்பு மேம்பட்டு வருகின்றது.
தவிர, வேலை வாய்ப்பு நிலைமை நிலையாக உள்ளது. நகரவாசிகளின் நுகர்வு விலை மிதமாக உயர்ந்தது.