விமான நிலையங்களில் இந்திய பயணியர் குடியுரிமை சோதனை பிரிவில் (Immigration) இனி நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க தேவையில்லை. நேரத்தை மிச்சமாகும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எப்.டி.ஐ.டி.டி.பி. (விரைவான குடியுரிமை பரிசோதனை சேவை) என்ற புதிய திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த சேவை, சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட ஏழு விமான நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள், விமான நிலையங்களில் உள்ள குடியுரிமை சோதனை பிரிவில் அனுமதி முத்திரை பெறுவது அவசியம்.
ஆனால் பயணியர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நேரத்தில், பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும்படி ஆகிறது. இதை எளிமைப்படுத்தும் வகையில், FTI-TTP எனும் விரைவான சேவையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.