2025ஆம் ஆண்டு மகிழ்ச்சியான வசந்த விழா பற்றிய உலகளாவிய நிகழ்வின் துவக்க விழா மலேசியாவின் கோலாலம்பூரில் ஜனவரி 25ஆம் நாளிரவு நடைபெற்றது.
மலேசிய தலைமையமைச்சர் அன்வர், சீனப் பண்பாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சர் சுன் யெலி முதலியோர் இந்த விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
விழாவில் சீனா, மலேசியா, பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா முதலிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அரங்கேற்றினர். இது வசந்த விழாவின் அமைதியான மற்றும் அழகான சூழ்நிலையையும் ஐந்து கண்டங்களின் கூட்டு ஒன்றுகூடி மகிழ்ச்சியடையும் சூழ்நிலையும் முழுமையாகக் காட்டுகின்றது.
இவ்வாண்டு மகிழ்ச்சியான வசந்த விழா பற்றிய நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் ஏறக்குறைய 500 கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.