சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பொங்லீயுவான் அம்மையார், ஸ்பெயின் மன்னர் பெலிப்பே VI உடன் சீனாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட ராணி லெடிசியா ஆகியோர், நவம்பர் 12ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மாநகரத்தின் மாற்றுத்திறனாளிகள் சேவை குறித்த முன்மாதிரி மையத்தைப் பார்வையிட்டனர்.
அப்போது பொங்லீயுவான் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக, அவர்களை சமூகத்தில் சிறப்பாக ஒருங்கிணைக்க அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சிகளும் ஆதரவும் தேவை என்று தெரிவித்தார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் தங்கள் கனவுகளை நனவாக்க சீனாவும் ஸ்பெயினும் அதிக பரிமாற்றங்களையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார்.
சீனாவின் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கான வளர்ச்சி, குறிப்பாக மாற்றுத்திறனாளி பெண்களின் வேலைவாய்ப்பு நிலைமை குறித்து லெடிசியா விரிவாக விசாரித்து, சீனாவின் சாதனைகளை மிகவும் பாராட்டினார்.
