ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரேஸ் 24ஆம் நாள் காணொளி வழியாக சீன சந்திர நாட்காட்டியின்படி பாம்பு ஆண்டின் வசந்த விழா உரை வழங்கினார்.
உலகளாவிய சீனர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, ஐ.நா மற்றும் பலதரப்புவாதத்துக்கான சீனா மற்றும் சீன மக்களின் உறுதியான ஆதரவிற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
பாம்பு என்பது ஞானம், நெகிழ்ச்சி மற்றும் புது துவக்கத்தின் சின்னமாகும். நாங்கள் நம்பிக்கை மற்றும் மனவுறுதியோடு புத்தாண்டின் துவக்கத்தை வரவேற்று அனைவருக்கும் மேலும் அருமையான எதிர்காலம் ஒன்றை உருவாக்கப் பாடுபட வேண்டும் என்று குட்ரேஸ் கூறினார்.