2023ஆம் ஆண்டு ஜெர்மனி சீனாவில் செய்துள்ள நேரடி முதலீட்டு தொகை முந்தைய ஆண்டில் இருந்ததை விட 4.3 விழுக்காடு அதிகரித்து, 1190 கோடி யூரோவை எட்டியுள்ளது.
இது வரலாற்றில் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை அடைந்துள்ளது என்று ஜெர்மன் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் அந்நாட்டு மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களின் படி எழுதிய ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் சீனாவில் ஜெர்மனி நிறுவனங்களின் முதலீட்டு தொகை, 2015 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான முதலீட்டுத் தொகைக்கு சமமாகும். கூடுதலாக, 2023ஆம் ஆண்டு சீனாவில் ஜெர்மனியின் முதலீடு, தனது மொத்த வெளிநாட்டு முதலீட்டு தொகையில் 10.3 சதவீதம் இடம் வகித்துள்ளது.
இதுவே, 2014ஆம் ஆண்டு முதல் இது வரை முதலீடு செய்யப்பட்ட மிக அதிகமான பதிவாகும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மற்றும் ஜெர்மன் செய்தி ஊடகம் இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.
கருத்துக் கணிப்பில் பங்கேற்ற பாதியளவுக்கும் அதிகமான ஜெர்மனி நிறுவனங்கள் வரும் 2 ஆண்டுகளுக்குள் சீனாவில் தனது முதலீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன என்று முன்பு வெளியான வணிக நம்பிக்கை பற்றிய ஆய்வு அறிக்கையில் வெளிகாட்டப்பட்டுள்ளது.