நைஜீரியாவில் உள்ள ஜம்பாரா மாகாணத்தில் ஒரு இஸ்லாமிய பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 7 முதல் 17 வயதுக்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் தங்கி படித்து வருகிறார்கள்.
இந்நிலையில்பள்ளிக்கு அருகே உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அது பள்ளிக்கும் பரவியது.
இந்த பயங்கர தீபத்தில் 17 சிறுவர்கள் உடற்கருகி உயிரிழந்த நிலையில் 12க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.