ஆண்டிமடம் அருகே கார் தீப்பற்றி எரிந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியில் அன்பழகன் என்பவர் ஹோட்டல் நடத்தி வந்தார். இவர் பணி நிமித்தமாக வீட்டில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் கார் திடீரென தீபிடித்தது.
உடனடியாக காரை விட்டு இறங்க முயன்றபோதும் காரின் கதவு திறக்கவில்லை. அங்கிருந்த பொதுமக்கள் எவ்வளவோ போராடியும் அவரை மீட்க முடியவில்லை. இதனால், அவர் உடல் கருகி உயிரிழந்தார்.