குளிர் காலத்தை ஒட்டி உலகின் மிகப்பெரிய பனி நகரத்தை கட்டமைத்து சீனா அசத்தியுள்ளது.
சீனாவில் ஹார்பின் நகரில் ஆண்டுதோறும் பனி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 26வது பனி திருவிழாவை பிரம்மாண்டமாக கொண்டாட சீன அரசு முடிவு செய்தது. அதன்படி ஹார்பின் நகரில் உலகின் மிகப்பெரிய பனி நகரம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பனி நகரத்தை பார்க்க ஏராளமான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், ஹார்பின் நகருக்கு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பனியால் செதுக்கப்பட்ட சிற்பங்களும், கட்டடங்களும் காண்போரை வியப்பில் ஆழ்த்தும் நிலையில், குழந்தைகளை கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் அங்கு இடம்பெற்றுள்ளன.
இரவு நேரங்களில் அங்குள்ள பனி கட்டடங்கள் அனைத்தும் மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன. இதை காண வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சீனாவிற்கு படையெடுத்து வருகின்றனர்.