கோவை கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டுவதற்கு டெண்டர் அறிவிப்பு  

Estimated read time 1 min read

கடந்த பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவையில் வரும் 2026 ஜனவரி மாதம் நூலகம் திறக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன் படி, இந்த நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டுவதற்கான டெண்டர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை சார்பில் இந்த டெண்டருக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கோவை காந்திபுரத்தில் மத்திய சிறைக்குச் சொந்தமான இடத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் ‘கலைஞர் நூலகம்’ அமையும் என செய்திகள் தெரிவித்தன.
சர்வதேச தரத்தில் கடந்த 2023-ம் ஆண்டில் மதுரையில் ரூ.215 கோடி மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டது.
அதேபோல கல்வி, மருத்துவத்துறையில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வரும் கோவை நகரில் சர்வதேச தரத்தில் நூலகம் அமைய வேண்டும் என கோரிக்கையின் விளைவாக இந்த நூலகம் அமைக்கப்படவுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author