மதுரை கீழக்கரை மைதானத்தில் அலங்காநல்லூர் ஒன்றியம் சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் சங்கீதா போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1030 காளைகளும், 500 மாடு வீரர்களும் பங்கேற்றனர்.
துள்ளிக்குதித்து சென்ற காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்க முற்பட்டனர்.
போட்டியில் சிறந்த வீரர் மற்றும் சிறந்த காளைகளின் உரிமயாளர்களுக்கு தங்க காசு, சைக்கிள, மிக்சி, மெத்தை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டியை பொதுமக்கள் பார்த்து ரசிப்பதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடையே டிஜே இசையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.