நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்தநாள்.
அதை ஒட்டி இயக்குனர் சுதா கொங்கரா ஒரு புதிய வீடியோவை வெளியிட்டு நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன், ‘அமரன்’ பட வெற்றிக்கு பின்னர் நடிக்கும் திரைப்படம் ‘பராசக்தி’.
சுதா கொங்கரா இயக்கத்தில், அதர்வா, ஜெயம் ரவி என பெரிய நடிகர் பட்டாளம் நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் வெளியீட்டு வீடியோ சமீபத்தில் வெளியானது.
அதில் வித்தியாசமான கெட்அப்பில் அதர்வா மற்றும் சிவகார்த்திகேயன் தோன்றி இருந்தனர்.
இப்படம் முன்னதாக நடிகர் சூர்யாவுடன் ‘புறநானூறு’ என்ற பெயரில் இயக்கடுவதாக இருந்தது என்ற பேச்சும் நிலவுகிறது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
‘பராசக்தி’ படப்பிடிப்பு தளத்தின் வீடியோவை வெளியிட்ட சுதா கொங்கரா
