தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.
அவரது சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘புஷ்பா 2: தி ரைஸ்’ இன் பிரீமியர் காட்சியில் கூட்ட நெரிசல் சிக்கி 39 வயது பெண் உயிரிழந்ததும் மற்றும் அவரது மைனர் மகன் படுகாயம் அடைந்ததும் தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார்.
ஹைதராபாத் காவல்துறையினர் அல்லு அர்ஜுன் வீட்டிற்கு வந்து அவரையும், அவரது தனிப்பட்ட பாதுகாவலரையும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கைது செய்தனர்.
காவல்துறையால் எடுத்துச் செல்லப்பட்டது சமூக ஊடகங்களில் வைரலானது.
கைதிற்கு பின்னர் அல்லு அர்ஜுன் சிக்கட்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.