இந்தியாவில் மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களில் ஓட்டுநர் உரிமமும் ஒன்றாக உள்ளது. இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை இயக்குவதற்கு ஓட்டுனர் உரிமம் என்பது அவசியம். வழக்கமாக ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்ல வேண்டி இருக்கும். ஆனால் தற்போது அங்கு செல்லாமல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
அதற்கு உங்களுடைய மொபைல் போன் அல்லது பொது சேவை மையம் மூலம் நீங்கள் எளிதில் விண்ணப்பித்து விடலாம். இதற்கு முன்பு நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பதிவு செய்திருக்க வேண்டும். அங்கு நீங்கள் பயிற்சி பெற வேண்டும். பிறகு பயிற்சி பள்ளி உங்களுக்கு கற்றல் ஓட்டுநர் உரிமம் சான்றிதழை வழங்கும்.
இந்த சான்றிதழ் மூலமாக ஆறு மாதங்களுக்குள் ஓட்டுனர் உரிமம் பெற்று விடலாம். பொது சேவை மையம் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து கற்றல் உரிமத்தில் இருந்து ஓட்டுநர் உரிமைகளை நீங்கள் எளிதில் பெற முடியும்.