ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் உள்ள பட்காம் மற்றும் கந்தர்பால் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட உமர் அப்துல்லா தொடர்ந்து முன்னிலை வகிப்பதால் அவர் இரு தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடுவது உறுதியாகியுள்ளது.
பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் தேசிய மாநாடு கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதன் காரணமாக காங்கிரஸ் கூட்டணி வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனை தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பாரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். மேலும் 10 வருடங்களுக்குப் பிறகு தங்களுக்கு ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பொதுமக்கள் கொடுத்ததற்காக உமர் அப்துல்லா நன்றி தெரிவித்துள்ளார்.