ராட்சசன், மரகத நாணயம், முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பிரபல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பி வி சங்கர், இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமாரை வைத்து கள்வன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில், ஜி வி பிரகாஷ் குமாரை தவிர, பாரதிராஜா, இவானா மற்றும் தீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தின் டீஸர் கடந்த ஜனவரி மாதம் வெளியான நிலையில், தற்போது இப்படத்தில் டிரெயிலர் வெளியாகி உள்ளது.
இன்று காலை சென்னையில் வைத்து நடைபெற்ற டிரெயிலர் வெளியீட்டு விழாவில், ஜி வி பிரகாஷ் குமார், இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகை இவானா ஆகியோர் கலந்து கொண்டனர்.