கனடாவில் நேற்று ஏற்பட்ட பனிப்புயலைத் தொடர்ந்து வீசிய பலத்த காற்று காரணமாக டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கனடாவின் டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் திங்கள்கிழமை இந்த விபத்து ஏற்பட்டது.
இதில் 80 பயணிகளில் 18 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் இரண்டு பேர் விமானம் மூலம் அவசர சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காயமடைந்த மீதமுள்ள பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தை டொராண்டோவின் பியர்சன் விமான நிலையமும் ஒப்புக்கொண்டது.
ஓடுபாதையில் தரையிறங்கும் போது கவிழ்ந்த கனடா விமானம்; 18 பேர் காயம்
