கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தங்கம் விலை என்பது அதிகரிக்க தொடங்கியது. ஒரு சவரன் 40 ஆயிரத்தை தாண்டிய நிலையில் தற்போது 60 ஆயிரத்தை தாண்டி விட்டது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற நிலையில் அவர் நாடுகள் மீது வரியை அதிகரிப்பதால் வரி போர் தொடங்கியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
இது கூட தங்கம் விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் கடந்த சில தினங்களாகவே ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
அந்தவகையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 63 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன் பிறகு ஒரு கிராம் 7970 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 108 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.