டிட்வா புயல் எதிரொலி : தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்!

Estimated read time 0 min read

டிட்வா புயல் எதிரொலியாகத் தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாகத் தமிழக கடலோட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தூத்துக்குடியில் பெய்த கனமழையால் ஆதிபராசக்தி நகர், மச்சாது நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் அவதியடைந்த மக்கள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, மின் மோட்டார் மூலமாகத் தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

You May Also Like

More From Author