சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழு ஏப்ரல் 25ஆம் நாள் கூட்டத்தை நடத்தி தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் பணிகளை ஆய்வு செய்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
நிலைப்புத் தன்மையை நிலைப்படுத்துவதோடு முன்னேற்றமடைவதில் ஊன்றி நின்று புதிய வளர்ச்சிக் கண்ணோட்டத்தை முழுமையாகவும் பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் உயர் நிலையான வெளிநாட்டுத் திறப்பை உறுதியாக விரிவாக்க வேண்டும்.
மேலும் ஆக்கப்பூர்வமான பயனுள்ள ஒட்டுமொத்த கொள்கைகளைச் செயல்படுத்துவதை விரைவுபடுத்த வேண்டும். நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உடையவர்களின் வருமானத்தை உயர்த்தி சேவை நுகர்வைப் பெரிதும் வளர்க்க வேண்டும் என்று இக்கூட்டத்தில சுட்டிக்காட்டப்பட்டது.
