தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வரும் அக்டோபர் 27-ஆம் தேதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) அறிவித்துள்ளது.
இந்தப் புயலுக்கு ‘மாந்தா'(Montha) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாடு பரிந்துரைத்த இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், இது நடப்பு வடகிழக்கு பருவமழைக் காலத்தில் உருவாகும் இரண்டாவது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆகும்.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தென் கிழக்கு வங்கக்கடலில் இன்று (அக். 24) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெறும்.
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
