சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினர்கள், செயலகத்தின் செயலாளர்கள், சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டி, அரசவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் கட்சிக் குழு உறுப்பினர்கள், அதியுயர் மக்கள் நீதி மன்றம் மற்றும் மக்கள் வழக்கறிஞர் மன்றத்தின் கட்சிக் குழு செயலாளர்கள் ஆகியோர் அண்மையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டிக்கும், பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங்கும் எழுத்து மூல பணியறிக்கையை வழங்கினர்.
இது குறித்து ஷி ச்சின்பிங் முக்கிய கோரிக்கை விடுத்தார். கடப்பாட்டினை நிறைவேற்றி, பொறுப்பை ஏற்று, இன்னல்களைச் சமாளித்து, கட்சி மத்தியக் கமிட்டியின் பல்வேறு கொள்கை முடிவுகளின் நடைமுறையாக்கத்தை முன்னேற்றி, சீன நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதற்குப் பங்காற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.