சீனாவின் பிரிவினை எதிர்ப்பு சட்ட அமலாக்கத்தின் 20ஆவது ஆண்டு நிறைவுக்கான கலந்துரையாடல் கூட்டம் மார்ச் 14ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் தலைவருமான சாவ் லேஜீ இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், புதிய யுகத்தில் சீனப் பாணியுடைய சோஷலிசம் பற்றிய ஷி ச்சின்பிங்கின் சிந்தனையை வழிக்காட்டலாக கொண்டு, தைவானுடன் தொடர்புடைய பணி பற்றிய ஷி ச்சின்பிங்கின் முக்கியக் கருத்துகளையும், புதிய யுகத்தில் தைவான் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒட்டுமொத்த திட்டத்தையும் பன்முகங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்றார்.
மேலும், பிரிவினை எதிர்ப்புச் சட்டத்தின் முக்கியப் பங்குகளை ஆழமாகப் புரிந்து கொண்டு, தைவான் சுதந்திர சக்திகளை ஒடுக்கி, வெளிப்புறச் சக்திகளின் தலையீட்டைத் தடுத்து, தாய்நாட்டின் ஒன்றிணைப்புப் பணியை உறுதியுடன் முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.