இவ்வாண்டின் முதல் இரு மாதங்களில், சீனாவில் புதிதாக நிறுவப்பட்ட அன்னிய தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 7574ஆக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.8 விழுக்காடு அதிகம். உண்மையாக பயன்படுத்தப்பட்ட அன்னிய முதலீட்டுத் தொகை 17 ஆயிரத்து 121 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 20.4 விழுக்காடு குறைவு.
ஆக்க தொழில் துறையில், உண்மையாக பயன்படுத்தப்பட்ட அன்னிய முதலீட்டுத் தொகை 4782 கோடி யுவானாகும். சேவை துறையிலும் உயர் தொழில் நுட்ப துறையிலும் இத்தொகை முறையே 12 ஆயிரத்து 49 கோடி யுவானாகவும் 5249 கோடி யுவானாகவும் உள்ளது.
பிரிட்டன், ஜெர்மனி, தென்கொரியா ஆகிய நாடுகள் சீனாவில் முதலீடு செய்த தொகை முறையே 87.9 54.7 45.2 விழுக்காடு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது