சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, மார்ச் 14ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன-ரஷிய-ஈரான் சந்திப்பில், ரஷிய துணை வெளியுறவு அமைச்சர், ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் ஆகியோரைச் சந்தித்துரையாடினார்.
அவர், ஈரான் அணு ஆற்றல் பிரச்சினையை உரிய முறையில் தீர்ப்பதற்கு சீனாவின் 5 நிலைப்பாடுகளை முன்வைத்தார்.
முதலாவது, அரசியல் மற்றும் தூதாண்மை வழிமுறையில் சர்ச்சையை அமைதியாகத் தீர்ப்பதில் ஊன்றி நிற்க வேண்டும். வன்முறை மற்றும் சட்டவிரோத தடை நடவடிக்கையை சீனா எதிர்க்கிறது. இரண்டாவது, அணு ஆயுத பரவல் தடுப்பு மற்றும் அணு ஆற்றலை அமைதியாகப் பயன்படுத்தும் இலக்கைப் பின்பற்றி, உரிமை மற்றும் பொறுப்பின் சமநிலையில் ஊன்றி நிற்க வேண்டும். மூன்றாவது, ஈரான் அணு ஆற்றல் பிரச்சினைக்கான பன்முக உடன்படிக்கை கட்டுக்கோப்பின் அடிப்படையில் புதிய ஒத்த கருத்துகளை எட்ட வேண்டும்.
நான்காவது, பேச்சுவார்த்தை மூலம் ஒத்துழைப்பை முன்னெடுத்து, ஐ.நா பாதுகாப்பவையின் கட்டாய தலையீட்டை எதிர்க்கிறது. ஐந்தாவது, கலந்தாய்வு மூலம் ஒத்த கருத்துகளை எட்ட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.