2022ஆம் ஆண்டு சீனாவின் பொது சுகாதாரச் சேவை துறையின் வளர்ச்சி பற்றிய புள்ளியியல் அறிக்கை சீனத் தேசிய சுகாதார ஆணையம் அக்டோபர் 12ஆம் நாள் வெளியிட்டது.
இவ்வறிக்கையின்படி, சீனாவின் மருத்துவ மற்றும் சுகாதார வளங்களின் மொத்த அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2022ஆம் ஆண்டின் இறுதிவரை, நாடளவில் சுகாதார நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 32 ஆயிரத்து 918ஐ எட்டி, முந்தைய ஆண்டை விட 1983 அதிகரித்தது.
ஆரம்பநிலை கணிப்பின்படி, கடந்த ஆண்டில் நாட்டின் மொத்த சுகாதாரச் செலவு 8 லட்சத்து 48 ஆயிரத்து 467 கோடி யுவானாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இத்தொகை 7 விழுக்காடு வகிக்கிறது. நபர்வாரி சுகாதாரச் செலவு 6010 யுவானாகும்.
அடிப்படை பொது சுகாதாரச் சேவையில் தனிநபருக்கான நிதியுதவி 2021ஆம் ஆண்டில் இருந்த 79 யுவானிலிருந்து 2022ஆம் ஆண்டில் 84 யுவானாக உயர்ந்தது.
மேலும், கடந்த ஆண்டு நாடளவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 95 லட்சத்து 60 ஆயிரமாகும். பிறப்பு பாலின விகிதம் 111.1. கிராமப்புறத்தில் குடும்ப நலத் திட்டங்களுக்கு ஊக்கம் மற்றும் உதவியளிக்கும் விதமாக 2780 கோடி யுவான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டை விட இது 375 கோடி யுவான் அதிகமாகும்.