சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, பிப்ரவரி 21ம் நாள் ஜோன்னெஸ்பேர்க் நகரில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கரைச் சந்தித்துரையாடினார்.
வாங்யீ கூறுகையில் கடந்த ஆண்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், இந்திய தலைமை அமைச்சர் மோடி ஆகியோர் கசான் நகரில் சந்திப்பு நடத்தி, இரு தரப்புறவின் முன்னேற்றத் திசையை உறுதி செய்தனர். இரு நாடுகளின் பல்நிலை தொடர்பை சரியாக மீட்டெடுத்து வருகிறது.
சீனாவும் இந்தியாவும் ஒன்றுக்கொன்று நம்பிக்கை கொடுப்பது, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறுவது ஆகியவை, இரு நாட்டு மக்களின் பொது எதிர்பார்ப்புகளுக்குப் பொருந்தியவை. இரு தரப்பும், இரு நாட்டுத் தலைவர்களின் ஒத்த கருத்துகளைப் பின்பற்றி, இரு தரப்புறவு சரியான பாதையில் முன்னேறுவதை உறுதி செய்ய வேண்டும்.
இந்தியாவுடன் இணைந்து, இரு நாட்டின் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 75வது ஆண்டு நிறைவின் கொண்டாட்ட நிகழ்வுகளைத் திட்டமிட்டு, இரு தரப்புறவின் வளர்ச்சிக்குப் புதிய உந்து சக்தியை ஊட்ட சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.
படம்:Chinese Foreign Ministry