அமெரிக்காவின் பரஸ்பர வரிக் கொள்கை பற்றிய சீனாவின் கருத்து

உலக வர்த்தக அமைப்பு ஏப்ரல் 9ஆம் நாள் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் சரக்குப் பொருட்கள் வர்த்தகக் கவுன்சிலின் முதலாவது ஆண்டுக் கூட்டத்தை நடத்தியது.

இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய சீனப் பிரதிநிதி, பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை மாற்றி அமைக்கும் அமெரிக்காவின் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்பில் சீனா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

அதோடு, உலக வர்த்தக அமைப்பின் விதிகளை அமெரிக்கா உண்மையாகப் பின்பற்றி, உலகப் பொருளாதாரம் மற்றும் பலதரப்பு வர்த்தக அமைப்புமுறைக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனச் சீனா கோரிக்கை வைப்பதாகவும் தெரிவித்தார்.

சீனா நிகழ்த்திய உரைக்குப் பல நாடுகளும் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளன. சீனாவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் உலக வர்த்தக அமைப்பின் விதிகளை அமெரிக்கா பயனுள்ள முறையில் பின்பற்ற வேண்டுமென்று ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், கனடா, ஜப்பான் முதலிய  உலக வர்த்தக அமைப்புகளைச் சேர்ந்த 46 உறுப்பு நாடுகள் அமெரிக்காவுக்கு வேண்டுகோள் விடுத்தன.

 

You May Also Like

More From Author