சீன-இத்தாலி திரைப்பட இசை நிகழ்ச்சி ரோம் நகரில் நடைபெற்றது

Estimated read time 1 min read

சீன ஊடக குழுமத்தின் ஏற்பாட்டில் இத்தாலியில் உள்ள சீனத் தூதரகத்தின் ஒத்துழைப்புடன், சீன-இத்தாலி திரைப்பட இசை நிகழ்ச்சி வசந்த விழா குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுடன் சந்திப்பு என்ற தலைப்பில் இத்தாலியின் தலைநகரான ரோமில் பிப்ரவரி 12ஆம் நாள் நடைபெற்றது. சீன ஊடக குழுமத்தின் வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான முன்னுரை கலை நிகழ்ச்சியை உலகம் ஒன்றாக கண்டு களிப்பது என்ற சிறப்பு நடவடிக்கைகளில் இந்நிகழ்ச்சியும் ஒன்றாகும். இத்தாலி பிரதிநிதிகள் அவைத் தலைவர் இந்நிகழ்ச்சிக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார். சீன ஊடக குழுமத்தின் இயக்குநர் ஷென் ஹாய்சியோங், இத்தாலி விளையாட்டு மற்றும் இளைஞர் துறை அமைச்சர், கோர்டினா டி அம்பேச்சொ நகரின் மேயர் ஆகியோர் காணொளி முறையில் உரை நிகழ்த்தினர்.

ஷென் ஹாய்சியோ கூறுகையில், இவ்வாண்டு மிலான்-கோர்டினா குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சீன குதிரை ஆண்டின் வசந்த விழா கொண்டாட்டத்துடன் சந்திக்கின்றன. இந்த அருமையான தருணத்தில் சீன ஊடக குழுமம் ரோம் நகரில் சீன-இத்தாலி திரைப்பட இசை நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம், வேறுபட்ட கலாசாரங்கள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளவும், இருநாட்டு மக்கள் கலாசார பரிமாற்றத்தில் நட்புறவை அதிகரிக்கவும் செயல்பட்டு, இருநாட்டு நாகரிக கற்றலுக்கு புதிய உயிராற்றலை வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author