இந்தியத் தரப்புடன் இணைந்து, சீன-இந்திய எல்லை பிரதேசத்தின் அமைதியையும் நிதானத்தையும் பேணிக்காக்க சீன இராணுவப் படை விரும்புவதாக தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சாங்சியௌகாங் 9ஆம் நாள் பிற்பகல் தெரிவித்தார்.
இவ்வாண்டு, சீன-இந்திய தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும். இதனை முன்னிட்டு,அண்மையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மும் ஒருவருக்கொருவர் வாழ்த்துச் செய்தியைப் அனுப்பினர்.
சீனாவும் இந்தியாவும் நாகரிகச் சிறப்பு வாய்ந்த நாடுகளாகவும் பெரிய வளரும் நாடுகளாகவும் திகழ்கின்றன. அதோடு, உலகின் தெற்குலக நாடுகளில் முக்கிய நாடுகளாகவும் விளங்குகின்றன.
இவ்விரு நாடுகள் சொந்த நவீனமயமாக்கக் கட்டுமானத்தின் முக்கிய காலகட்டத்தில் உள்ளன. இந்நிலையில் கூட்டாக வளர்ந்து செல்வம் அடைவது, இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்குப் பெருந்தியதாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியத் தரப்புடன் சேர்ந்து, நெடுநோக்குப் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தி, இரு தரப்பு எல்லை பிரதேசத்தின் அமைதியையும் நிதானத்தையும் கூட்டாகப் பேணிக்காக சீன இராணுவம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.