ஆஸ்திரேலியாவில் ச்சோ லெஜி நட்பு பயணம்

Estimated read time 1 min read

சீன தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டி தலைவர் ச்சோ லெஜி நவம்பர் 22ம் நாள் முதல் 25ம் நாள் வரை, ஆஸ்திரேலியாவில் நட்பு பயணம் மேற்கொண்டு, ஆஸ்திரேலிய தலைமை ஆளுனர், தலைமை அமைச்சர் முதலிய தலைவர்களைச் சந்தித்துரையாடினார்.

ஆஸ்திரேலிய தலைமை ஆளுனர் மோஸ்தின் அம்மையாரைச் சந்தித்த போது அவர் கூறுகையில், ஆஸ்திரேலியாவுடன் இணைந்து, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பை ஆழமாக்கி, மேலும் நிலையான மற்றும் பயனமிக்க சீன-ஆஸ்திரேலிய பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை முன்னெடுக்க சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

தலைமை அமைச்சர் அல்பானிஸுடன் சந்திப்பு நடத்திய போது ச்சா லெஜி கூறுகையில், சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்குமிடையே அடிப்படை நலன் மோதல்கள் இல்லை. ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொண்டு, எரிசக்தி மற்றும் கரிமவளம், அறிவியல் புத்தாக்கம், எண்ணியல் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விரும்புகிறது. தைவான், ஹாங்காங், ஷிசாங் முதலிய பிரச்சினைகள், சீனாவின் இறையாண்மை மற்றும் மைய நலன்களுடன் தொடர்புடையவை. இவை குறித்து சீனாவின் நிலைப்பாட்டுக்கு ஆஸ்திரேலியா மதிப்பளிக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author