இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 9 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்

இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 9 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. இதில், தெற்கு ரயில்வேயில் முதல் ரூட்டாக திருவனந்தபுரம் – மங்களூர் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படலாம் என கூறப்படுகிறது.

முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வடக்கு ரயில்வேயில் இயக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 9 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. தெற்கு ரயில்வேயில் முதல் ரூட்டாக திருவனந்தபுரம் – மங்களூர் வழித்தடத்தில் இயக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

திருவனந்தபுரம் – பெங்களூர் ரூட்
அதுமட்டும் இன்றி திருவனந்தபுரம் – பெங்களூர், கன்னியாகுமரி – ஸ்ரீநகர் (கொங்கன் வழித்தடம்) ஆகிய வழித்தடங்களும் பரிசீலனையில் உள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் முழுவதும் ஏசி வசதி கொண்டது ஆகும். இந்த ரயில்களில் 1,128 பயணிகள் பயணிக்க முடியும். தொலை தூர பயணங்களுக்கு இந்த ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது

You May Also Like

More From Author