தவெக அரசை கண்டித்து தஞ்சாவூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகதாது பிரச்னையில் மெத்தனம் காட்டி வருவதுடன், காவிரியில் தமிழகத்துக்கான நீரை பெறுவதில் தவெக அரசு மெத்தனம் காட்டி வருவதாகவும் குற்றஞ்சாட்டி அதிமுக சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இபிஎஸ் அறிவித்திருந்தார்.
அதன்படி தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டு, தவெக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
