இந்தியாவின் 80-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ள விழாவில், தமிழக முதல்வர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றவுள்ளார்.
இது முதல்வராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் கட்சி தொண்டர்களும், ரசிகர்களும் முதல்வரின் உரையை கேட்க ஆர்வமாக உள்ளனர்.
இந்த உரையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் உத்தரவின் பேரில், சுதந்திர தின விழா எவ்வித இடையூறுமின்றி பாதுகாப்பாக நடைபெறும் வகையில் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
80-வது சுதந்திர தின விழா: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதன்முறையாக கொடியேற்றவுள்ளார் முதல்வர் விஜய்
