சீன அரசுத் தலைவர் கம்போடியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்ட ஏப்ரல் 17ஆம் நாள், சீன ஊடக் குழுமம், கம்போடியாவின் செய்தித் துறை அமைச்சகம், பண்பாடு மற்றும் கல்வி அமைச்சம், சுற்றுலா துறை அமைச்சகம் முதலியற்றுடன் இணைந்து, அந்நாட்டின் தலைநகரில் மானிடப் பண்பாட்டியல் பரிமாற்ற நடவடிக்கையை நடத்தியது.
இந்நடவடிக்கையின் ஒரு பகுதியாக சீன-கம்போடிய செய்தி ஊடகக் கூட்டாளி அமைப்புமுறை தொடங்கப்பட்டது. அதோடு, சீன-கம்போடிய நாகரிகப் பரிமாற்ற நிகழ்ச்சி, 10ஆவது திறந்த வெளி திரையரங்கு நடவடிக்கை முதலியவைகளும் தொடங்கப்பட்டன. மேலும், சீன ஊடகக் குழுமமானது அந்நாட்டின் நிறுவனங்கள் மற்றும் செய்திஊடகங்களுடன் பல பயனுள்ள ஒத்துழைப்புகளையும் மேற்கொண்டது.