பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவைக் கட்டியமைக்க சீனாவும் ஈக்குவடோர் கினியாவும் கூட்டறிக்கை

சீன மக்கள் குடியரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பையேற்று, ஈக்குவடோர் கினிய அரசுத் தலைவர் தியோடோரோ ஒபியாங் 2024ஆம் ஆண்டு மே 27முதல் 31ஆம் நாள் வரை சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.


பயணத்தின் போது, இரு நாட்டுத் தலைவர்கள் நட்பார்ந்த சூழலில் பேச்சுவார்த்தை நடத்தினர். சீன-ஈக்குவடோர் கினிய உறவு, சீன-ஆப்பிரிக்க உறவு, பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களை ஆழமாகப் பரிமாறி முக்கிய பொது கருத்துக்களை எட்டியுள்ளனர்.

இரு தரப்பினரும் வெளியிட்ட கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டுகையில், 1970ஆம் ஆண்டு இரு நாடுகளும் தூதாண்மையுறவு நிறுவப்பட்டது முதல் இதுவரை, இரு நாட்டின் பாரம்பரிய நட்புறவு உறுதியாக உள்ளது.

குழப்பங்களை நிறைந்த இன்றைய உலகில் ஒற்றுமையான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது வளரும் நாடுகளுக்கு மேலும் தேவைப்படுகிறது. சீன-ஈக்குவடோர் கினிய நட்புறவின் நெடுநோக்கு முக்கியத்துவம் மேலும் தெளிவாக காணப்பட்டுள்ளது என்று இரு தரப்பினரும் ஒருமனதாக கருத்து தெரிவித்துள்ளனர்.


நாட்டின் சுதந்திரம் மற்றும் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான உரிமையைப் பேணிக்காப்பதில் ஈக்குவடோர் கினியாவுக்கு உறுதியாக ஆதரவளிக்கும் என்றும், வெளிப்புற சக்தி ஈக்குவடோர் கினியாவின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உறுதியாக எதிர்க்கும் என்றும் சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.


மேலும், ஒரே சீனா என்ற கோட்பாட்டை உறுதியாகப் பின்பற்றுவதை ஈக்குடோர் கினியா வலியுறுத்தியுள்ளது. இந்த உலகில் ஒரே ஒரு சீனா உண்டு. தைவான் சீன உரிமைப் பிரதேசத்தில் பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும் என்று ஈக்குடோர் கினியா கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டறிக்கை மே 28ஆம் நாள் பெய்ஜிங்கில் வெளியிடப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author