ஜொங் குவான் சுன் மன்றத்தின் 2025ஆம் ஆண்டு கூட்டம் மார்ச் 27ஆம் நாள் துவங்கியது. உயர்தர உற்பத்தித் திறன் மற்றும் உலக அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு என்பது இக்கூட்டத்தின் தலைப்பாகும்.
நடப்புக் கூட்டத்தில் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்தால் உயர்தர உற்பத்தி திறனை வளர்த்து, உலகப் புத்தாக்க வளர்ச்சிக்குப் புதிய யோசனைகளை வழங்குவது குறித்து 100க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த விருந்தினர்கள் கூட்டாக விவாதிப்பார்கள்.
செயற்கை நுண்ணறிவு பெரிய மாதிரி, குவாண்டம் அறிவியல் தொழில்நுட்பம், உயிரி மருத்துவம் மற்றும் மருந்துகள், 6ஜி முதலிய முன்னேறிய துறைகளில் இக்கூட்டம் கவனம் செலுத்தும். மேலும், இம்மன்றக் கூட்டத்தின் போது 10 தொழில் சின்னங்களின் மன்றங்கள் மற்றும் 50 புத்தாக்க மன்றங்கள் அமைக்கப்படும்.
அவற்றின் வழி முன்னேறிய அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் தொழில்துறைகளின் மேம்பாட்டு போக்கு ஆகியவை ஆழமாக விவாதிக்கப்படும்