சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 28ஆம் நாள் காலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சர்வதேசத் தொழில் மற்றும் வணிகத் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்தித்துரையாடினார்.
அவர்களின் வருகைக்கு வரவேற்பு தெரிவித்த ஷிச்சின்பிங், சீனாவுடனான நீண்டகால ஒத்துழைப்பில் அவர்களின் முயற்சிகளைப் பாராட்டினார்.
ஷிச்சின்பிங் மேலும் கூறுகையில், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு மூலம், சீனா உலகச் சந்தைக்குள் வேகமாக நுழைந்து காலத்தின் வளர்ச்சிப் போக்குடன் விரைவாக இணைந்துள்ளது. அவற்றில் வெளிநாட்டு முதலீட்டை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவது முக்கியமான திறவுகோல்களில் ஒன்று. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்து சீனாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை முன்னேற்றியுள்ளன.
அதோடு, சீனத் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத்தின் மேம்பாட்டையும் தூண்டி சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக்கும் உதவியளித்துள்ளன. சீனப் பாணி நவீனமயமாக்கலின் முக்கிய பங்களிப்பாளராக வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் திகழ்ந்து வருவது நடைமுறைப் போக்கில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உலகின் 2ஆவது மிகப் பெரிய நுகர்வு சந்தையாகச் சீனா திகழ்கிறது. உலகளவில் மிக அதிகமான இடைநிலை வருமானமுடையவர்களையும், முதலீடு மற்றும் நுகர்வில் மாபெரும் உள்ளார்ந்த ஆற்றலையும் சீனா கொண்டுள்ளது.
உயர் தர வளர்ச்சி, பசுமையமயாக்கம், எண்ணியல்மயமாக்கம் மற்றும் நுண்ணறிவு மயமாக்கத்தை விரைவுபடுத்துவதில் சீனா பாட்டுபட்டு வருகிறது என்றார்.
சந்தை நுழைவுக்கான நிபந்தனைகளைக் குறைப்பதற்கு சீனா முக்கியத்துவமளித்து திறப்பை மேலும் விரிவாக்கவுள்ளது. சீனாவிலுள்ள வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தேசிய அணுகு முறையை சமமாக அனுபவிப்பதை உறுதிப்படுத்தி சந்தையின் நியாயமான போட்டியைப் பேணிக்காக்கும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.
இச்சந்திப்பில் ஜெர்மனியின் மெர்சிடிஸ் பென்ஸ் குழுமம், ஃபெடெக்ஸ் எக்ஸ்பிரஸ் குழுமம், எச்எஸ்பிசி ஹோல்டிங்ஸ் பிஎல்சி உள்ளிட்ட 40க்கும் அதிகமான வெளிநாட்டு நிறுவனங்களின் தலைமை இயக்குநர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் வணிக சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.