வந்தவாசி, மார்ச் 10:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் மஹா சிவராத்திரி மற்றும் மயானசூறை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சிவராத்திரியன்று முத்துப் பல்லக்கில் அம்மன் பவனி வந்தார். மேலும் மயான சூறை உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் உடம்பில் அலகு குத்தியும், காளி வேடமணிந்தும், எலுமிச்சை பழம் உடம்பில் குத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
உற்சவ மூர்த்தி அம்மன் உக்ர காளியாக நின்ற கோலத்தில் வலம் வீதியுலா வந்தார். விழாவிற்கு காவல்துறையினர் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.