சமூக ஊடகத் தளங்களில் பிரபலமாகி உள்ள சீனராக மாறுவது என்ற வார்த்தை, சீனக் கலாசாரத்தை அனுபவித்து சீனா பற்றி அறிந்து கொள்ளும் சரியான முறையாக மாறியுள்ளது.
இது தொடர்பாக உலகளாவிய இணைய பயனர்களிடையில் சிஜிடிஎன் ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, சீனக் கலாசாரம் ஒரே வழி பரப்புரையிலிருந்து பரந்த மறுமொழியைப் பெறுவதற்கு மாறியுள்ளதாகவும், சீனராக மாறி பாரம்பரிய சீனப் புத்தாண்டை கொண்டாடுவதை எதிர்பார்ப்பதாகவும் 80.8 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு முன், பாரம்பரிய புத்தாண்டை சீன மக்கள் கொண்டாடும் சமூக நடைமுறையான வசந்த விழா யுனெஸ்கோவின் பொருள்சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பிரதிநிதித்துவப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, மனிதகுலத்தின் பொது செல்வமாக மாறியுள்ளது.
இது குறித்து 91.7 விழுக்காட்டினர் கருத்து கணிப்பின் போது கூறுகையில், வசந்த விழா உள்ளடக்கிய ஒற்றுமை, நட்பு, அமைதி, சுமுகம், இணக்கம் ஆகிய அம்சங்கள், மனிதகுல நாகரிகத்தின் மைய விழுமியங்களுடன் ஒத்துபோகின்றன.
மேலும், சீனாவின் திறப்பு, சந்தை மற்றும் கொள்கை ரீதியான திறப்பு மட்டுமல்ல, வாழ்க்கை முறை மற்றும் பண்பாட்டுச் சிந்தனையின் ஒருங்கிணைப்பும் ஆகும் என்பதை சீனராக மாறுவதன் பிரபலம் வெளிக்காட்டியுள்ளதாக 76.3 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.
சீனக் கலாசாரத்தின் உலகளாவிய செல்வாக்கு உலகளவில் நுகர்வுச் சந்தையின் உயிராற்றலை மேலும் ஊக்குவிக்கும் என்றும் 88.2 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.
