டெல்லியின் ரோகிணி பகுதியில் வசிக்கும் 70 வயது முதியவர் மற்றும் அவரது மனைவியிடம் டிஜிட்டல் அரெஸ்ட் முறையில் மர்ம நபர்கள் சுமார் 14 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளனர்.
இது சமீபகாலமாக இந்தியாவில் அதிகரித்து வரும் ஒரு அபாயகரமான ஆன்லைன் மோசடி முறையாகும்.
பாதிக்கப்பட்ட முதியவர் ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோசடிக்காரர்கள் தங்களை சிபிஐ மற்றும் மும்பை காவல்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அந்த முதியவரைத் தொடர்பு கொண்டுள்ளனர்.
அவரது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஒரு பார்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதப் பொருட்கள் இருப்பதாகவும் கூறி மிரட்டியுள்ளனர்.
டெல்லியில் முதிய தம்பதியிடம் ரூ.14 கோடி டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி
