கடலூரில் இன்று காலை நேரத்தில் ஏற்பட்ட கடும் ரயில் விபத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் செம்மங்குப்பம் பகுதியில், ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கி வந்த ரயில் மோதியதால் இந்த கோர விபத்து நிகழ்ந்தது.
குழந்தைகள் ஏற்றிக்கொண்டு சென்ற பள்ளி வேன், ரயில் வருவதை கவனிக்காமல் கடக்க முயன்றதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில் வேகத்துடன் மோதியதால் வேன் முற்றிலும் நொறுங்கியது. இதில் இருந்த மாணவ, மாணவிகள் தூக்கி வீசப்பட்டு பலர் படுகாயமடைந்தனர்.
உயிரிழந்த இருவரும் பள்ளி மாணவர்கள் என்பது உறுதியாகியுள்ளது.
காயம் அடைந்த மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடலூரில் பள்ளி பஸ் மீது ரயில் மோதி பயங்கர விபத்து; 2 மாணவர்கள் பலி
