பிரேசிலில் வசந்த விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிக்கான சிறப்பு நடவடிக்கை

Estimated read time 1 min read

வசந்த விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் மற்றும் உலகளாவிய வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு எனும் சிறப்பு நடவடிக்கை, பிப்ரவரி 10ஆம் நாள்,  பிரேசிலின் பிரேசிலியா நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹைய்சியோங் காணொளி மூலம் உரை நிகழ்த்தினார். இரு நாடுகளின் பண்பாடு மற்றும் ஊடகத் துறைகளைச் சேர்ந்த 100க்கும் மேலானோர் இதில் கலந்து கொண்டனர்.

ஷென் ஹைய்சியோங் கூறுகையில், தற்போது உலகளவில் சுமார் 20 நாடுகள் மற்றும் பிரதேசங்களில், சட்டப்பூர்வ விழாவாக வசந்த விழா அனுசரிக்கப்படுகின்றது என்றார். மேலும், மென்மேலும் அதிகமானோர் இவ்விழாவின் மூலம் சீனப் பண்பாடுகளை அறிந்து கொண்டு வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், வசந்த விழா கொண்டாட்டத்துக்கான சீன ஊடகக் குழுமத்தின் கலை நிகழ்ச்சிகள் 43 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன என்றார்.

நடப்பு ஆண்டில் சீன ஊடகக் குழுமம், “5G+4K/8K+AI” என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, 85 மொழிகளின் மூலம், உலகளவில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான சீனப் பண்பாட்டு நிகழ்ச்சியை வழங்கும் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author