ஐ.நாவின் பொருளாதாரம், சமூகம், பண்பாட்டு உரிமை அறிவு மையம் ஒரு கருப்பொருள் கூட்டத்தை நடத்தியது

ஜெனீவாவுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதிக் குழு, ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான உயர் நிலை தூதர் அலுவலகம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை 8ஆம் நாள், ஜெனீவாவில் ஐ.நாவின் பொருளாதாரம், சமூகம், பண்பாட்டு உரிமை அறிவு மையம் என்ற கருப்பொருளிலான உரையாடல் கூட்டத்தைக் கூட்டாக நடத்தின.

ஐ.நாவிற்கான சீனப் பிரதிநிதிக் குழுவின் துணைத் தலைவர் லீ சியௌமே இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில்,            

சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கத்தை முன்னேற்றும் போக்கில், மனித உரிமை உத்தரவாத நிலையை சீனா எப்போதும் உயர்த்தி வருகிறது. மனித உரிமையை வளர்ப்பதற்கான பயனுள்ள அனுபவங்களை உலகத்துடன் பகிர்ந்துகொள்ள சீனா முயற்சி செய்து வருகிறது என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author