இன்னும் 4 விக்கெட் தான்.. ரவீந்திர ஜடேஜாவின் ஆல்டைம் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – குல்தீப் யாதவ்

Estimated read time 1 min read

ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடி வரும் வேளையில் இந்திய அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.

குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தங்களது முதலாவது லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராகவும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் விளையாடி இருந்தது.

ரவீந்திர ஜடேஜாவை முந்த காத்திருக்கும் குல்தீப் யாதவ் :

இந்த இரண்டு போட்டிகளுமே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் அடுத்ததாக செப்டம்பர் 19-ஆம் தேதியான இன்று ஓமன் அணியை எதிர்த்து விளையாடி இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை நடைபெற்று முடிந்த இந்த முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் மிகச்சிறப்பாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் இந்த ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கும் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ரவீந்திர ஜடேஜாவின் ஆல் டைம் சாதனை ஒன்றினை முறியடிக்க காத்திருக்கிறார்.

அந்த வகையில் அவர் நிகழ்த்தப் போகும் சாதனை யாதெனில் : இதுவரை ஆசிய கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரராக ரவீந்திர ஜடேஜா முடித்த இடத்தில் உள்ளார். ரவீந்திர ஜடேஜா ஆசிய கோப்பை தொடரில் மட்டும் 20 போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருக்கிறார்.

அவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் குல்தீப் யாதவ் 11 போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளை வீழ்த்தி வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் இந்த ஆசிய கோப்பை தொடரின் எஞ்சிய போட்டிகளில் அவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் இந்திய அணி சார்பாக ஆசிய கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரராக முதலிடத்திற்கு செல்வார்.

ஒட்டுமொத்தமாக ஆசிய கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இலங்கை வீரர் லாசித் மலிங்கா 14 போட்டியில் விளையாடிய 33 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author