பச்சை பட்டுடன், பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷத்துடன் வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்  

Estimated read time 0 min read

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான “கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம்”, இன்று (12.05.25) அதிகாலை 6 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.
பச்சை பட்டுடன் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அழகரை, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷங்களுடன் வரவேற்றனர்.
மே 10ஆம் தேதி அழகர்கோயிலிலிருந்து புறப்பட்ட கள்ளழகருக்கு, நேற்று அதிகாலை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெற்றது.
இன்று கருப்பணசுவாமி கோயிலில் இருந்து பொன் சப்பரத்தில் எழுந்தருளிய கள்ளழகர், பின்னர் தங்கக் குதிரை வாகனத்தில் வைகையை நோக்கி புறப்பட்டார்.
வழியிலெல்லாம் பக்தர்கள் தண்ணீர் பீச்சியும், சர்க்கரை தீபங்களும் ஏற்றி அவரைத் தரிசித்தனர்.

You May Also Like

More From Author