சீன-அமெரிக்க இடையே முக்கிய ஒத்த கருத்துக்கள்—சீனத் துணை தலைமை அமைச்சர்

Estimated read time 1 min read

சீன-அமெரிக்க உயர் நிலை பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தை மே 10, 11ஆகிய நாட்களில் ஜெனீவாவில் நடைபெற்றது.

இப்பேச்சுவார்த்தையில் முக்கிய ஒத்த கருத்துக்கள் எட்டப்பட்டு பயனுள்ள முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. மே 12ஆம் நாள் பேச்சுவார்த்தைக்கான கூட்டறிக்கை வெளியிடப்படும் என்று  சீனப் பிரதிநிதிக் குழுவின் தலைவரும் சீனத் துணை தலைமை அமைச்சருமான ஹூலிஃபென் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவு இரு நாடுகளுக்கும் மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்தின் நிலைப்பு மற்றும் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

அமெரிக்க தரப்புடன் இணைந்து, பிரச்சினையைத் தீர்ப்பதற்கான  திறந்த மனப்பான்மையுடன் இரு நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவு புதிய வளர்ச்சியடைவதை நோக்கமாக கொண்டு, உலகப் பொருளாதாரத்துக்கு மேலதிக உறுதித் தன்மை மற்றும் நிலைப்புத் தன்மையை அளிக்க சீனா விரும்புவதாக ஹூலிஃபென் கூறினார்.

 

You May Also Like

More From Author