சீன-அமெரிக்க உயர் நிலை பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தை மே 10, 11 ஆகிய நாட்களில் ஜெனீவாவில் நடைபெற்றது.
சீனப் பிரதிநிதிக் குழுவின் தலைவரும் சீனத் துணை தலைமை அமைச்சருமான ஹூலிஃபென், அமெரிக்க பிரதிநிதிக் குழுவின் தலைவரும், அமெரிக்க நிதித் துறை அமைச்சருமான பெசென்ட் மற்றும் வர்த்தக பிரதிநிதி கிரீர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
ஜனவரி 17ஆம் நாள் இரு நாட்டு அரசுத் தலைவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எட்டியுள்ள முக்கிய பொது கருத்துக்களைச் செயல்படுத்துவது குறித்து இரு தரப்பும் மனம் திறந்து ஆழமான பயனுள்ள பரிமாற்றத்தை மேற்கொண்டு முக்கிய பொது கருத்துக்கள் பலவற்றை உருவாக்கியுள்ளன.
பொருளாதார மற்றும் வர்த்தக கலந்தாய்வு அமைப்பு முறையைக் கட்டியமைக்கவும், இத்துறையிலுள்ள தத்தமது கவனங்கள் குறித்து தொடர்பை நிலைப்படுத்தவும் இரு தரப்பும் ஒருமனதாக ஒப்புக்கொண்டன.